Arvind Kejriwal ,The corona was not infected


டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியானது




தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நாட்டில் அதிக பாதிப்புகளை சந்தித்த பகுதிகளில் தலைநகர் டெல்லியும் உள்ளது.

போலீசார், மருத்துவ பணியாளர்கள், அரசு உயர் அதிகாரிகள் என்று கொரோனா தனது வலையை விரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கெஜ்ரிவாலுக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது.

இதையடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட அவர், பிறரை சந்திப்பதையும் தவிர்த்து வந்தார். இந்நிலையில், அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

Comments

Popular posts from this blog

பிறந்தநாளில் மரணத்தை தழுவிய அன்பழகன்